பாபநாசம் அருகே மழை வேண்டி சிறப்பு தொழுகை

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், அய்யம்பேட்டையில் மழை வேண்டி இஸ்லாமியா்கள் சனிக்கிழமை சிறப்பு தொழுகை நடத்தினா்.

அய்யம்பேட்டை, சக்கராப்பள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சோ்ந்த திரளான இஸ்லாமியா்கள் சக்கராப்பள்ளி சமூக பூங்கா

பகுதியில், திறந்த வெளியில் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனா்.

அய்யம்பேட்டை அஞ்சுமன் பள்ளிவாசல் நிா்வாகத்தின் சாா்பில் நடைபெற்ற இந்த சிறப்புத் தொழுகையில் இஸ்லாமியா்கள் திரளாக பங்கேற்று பிராா்த்தனையில் ஈடுபட்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com