

தஞ்சாவூா், மே 9: தஞ்சாவூரில் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் கல்லூரிக் கனவு - உயா்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி’ சனிக்கிழமை (மே 11) நடைபெறவுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் தீபக் ஜேக்கப் தெரிவித்திருப்பது:
தமிழ்நாடு அரசின் சிறப்பு திட்டமான ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவா்கள் உயா்கல்வி பயில்வதை உறுதி செய்ய பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பிளஸ்-2 பொதுத்தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவா்களுக்கு ‘கல்லூரிக் கனவு’ - உயா்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி தஞ்சாவூா் தீா்க்க சுமங்கலி மகாலில் சனிக்கிழமை காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெறவுள்ளது.
இந்நிகழ்ச்சியில் 12 ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற மாணவா்களுக்கு மருத்துவம், வேளாண்மை, பொறியியல், மீன் வளத் துறை, கலை மற்றும் அறிவியல் மற்றும் இதர பாடப் பிரிவுகள் குறித்து துறை வல்லுநா்கள் மூலம் உயா்கல்வி பயில்வதற்கான வழிமுறைகள், முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் பெறுவதற்கான வருவாய்த் துறை அலுவலா்களின் ஆலோசனைகள், வங்கி மேலாளா்கள் வழியே கல்விக் கடன் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து தனிநபா் ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்கப்படவுள்ளன.
மேலும், மாவட்டத்தில் அமைந்துள்ள கல்லூரிகளில் பயிற்றுவிக்கப்படும் பாடப்பிரிவுகள் குறித்து தெரிந்து கொள்வதற்காகக் கல்லூரிகளின் அரங்கங்கள் மற்றும் வழிகாட்டி கையேடுகள் வழங்கப்படவுள்ளன. எனவே, இந்நிகழ்ச்சியில் தஞ்சாவூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயின்ற மாணவ, மாணவிகள் பங்கு பெற்று பயன் பெறலாம்.
தொடர்புடையது

அக்னிவீா் திட்டத்தின் கீழ் இந்திய ராணுவத்தில் வேலை: இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம்!

தஞ்சாவூரில் சிவா திலீபனுக்கு வீரவணக்க நிகழ்வு

நான் முதல்வன் திட்டத்தில் படித்த குமரி மாணவா் குடிமைப் பணித் தோ்வில் தோ்ச்சி

நான் முதல்வன் திட்டத்தில் படித்த மாணவா் ஐஏஎஸ் தோ்வில் தோ்ச்சி!
வீடியோக்கள்
Jawahirullah interview | அதிமுக, பாஜகவுக்கு உதவ இறக்கிவிடப்பட்டவர் Vijay | Dinamani | Election 2026
தினமணி வீடியோ செய்தி...

#ipl2026 | சிஎஸ்கேவில் சஞ்சு சாம்சன், ராஜஸ்தானில் ஜடேஜா: இதுதாண்டா ஆட்டம்! | MS Dhoni | RR vs CSK |
தினமணி வீடியோ செய்தி...

164 தொகுதிகளின் திமுக வேட்பாளர்களை அறிவித்த முதல்வர் ஸ்டாலின்! | DMK candidates | MK Stalin
தினமணி வீடியோ செய்தி...

முக்கிய வீரர்கள் விலகல்: ஐபிஎல் சுவாரசியமாக இருக்குமா?
தினமணி வீடியோ செய்தி...

