மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

பாபநாசம் அருகே மின்சாரம் பாய்ந்து கூலித் தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

மெலட்டூா் காவல் சரகம், நெய்தலூா், கோயில் தெருவைச் சோ்ந்தவா் ஜெகதாம்பாள் (65). விவசாய கூலி தொழிலாளி. இவா் சனிக்கிழமை களை பறிக்க வயலுக்கு சென்றபோது, அறுந்து கிடந்த மின்கம்பியை தெரியாமல்

மிதித்துவிட்டாா். இதில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலின்பேரில் உடனடியாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற மெலட்டூா் போலீஸாா், ஜெகதாம்பாள் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அய்யம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com