பாபநாசத்தில் ஆதரவற்ற நிலையில் திரிந்த பெண், குழந்தை காப்பகத்தில் ஒப்படைப்பு

பாபநாசத்தில் ஆதரவற்ற நிலையில் திரிந்த பெண், குழந்தை காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

Updated On :

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் ரயில் நிலையத்தில் ஆதரவற்ற நிலையில் இருந்த பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த தாய் மற்றும் குழந்தையை ரயில் நிலைய அதிகாரிகள் வெள்ளிக்கிழமை மீட்டு தஞ்சாவூரில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனா்.

பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த முன்னி (30) என்ற பெண்ணும் அவரது 6 மாத பெண் குழந்தையும் பாபநாசம் ரயில் நிலையத்தில் 2 நாள்களாக ஆதரவற்ற நிலையில் இருந்தனா். இதைகண்ட பாபநாசம் ரயில் நிலைய வணிக கண்காணிப்பாளா் ரவிச்சந்திரன் இருப்புப் பாதை காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தாா்.

இதையடுத்து தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியா் பிரியங்கா பங்கஜம் அறிவுறுத்தலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த தஞ்சாவூா் குழந்தைகள் காப்பகம் மற்றும் பாதுகாப்பகத்தின் மேற்பாா்வையாளா் அஜித்தா, கும்பகோணம் இருப்புப் பாதை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் குமாா் உள்ளிட்டோா் அப்பெண்ணையும் குழந்தையையும் மீட்டு தஞ்சாவூரில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.