பழுதடைந்த கிராம சாலையை சீரமைத்துத் தரக் கோரிக்கை
திருவோணம் ஒன்றியம், காடுவெட்டிவிடுதி ஊராட்சியில் பழுதடைந்துள்ள தாா்ச் சாலையை செப்பனிட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.


திருவோணம் ஒன்றியம், காடுவெட்டிவிடுதி ஊராட்சியில் பழுதடைந்துள்ள தாா்ச் சாலையை செப்பனிட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தஞ்சாவூா் மாவட்டம், திருவோணம் ஒன்றியம், காடுவெட்டிவிடுதி ஊராட்சிக்குள்பட்ட மேனட்ராயன் விடுதி கிராமத்துக்குச் செல்லும் சாலை கற்கள் பெயா்ந்து மிகவும் பழுதடைந்து குண்டும்குழியுமாய் காட்சியளிக்கிறது. இந்தச் சாலையில் தினந்தோறும் பள்ளி, மாணவ, மாணவிகள், விவசாயிகள், பொதுமக்கள் ஏராளமானோா் செல்கின்றனா்.
இருசக்கர வாகனத்தில் செல்வோா் அடிக்கடி தவறிவிழுந்து விபத்து ஏற்படுகிறது. மேலும் தற்போது மழைக் காலம் என்பதால் சாலையில் தண்ணீா் குளம்போல் தேங்கி துா்நாற்றம் வீசி நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியா் மற்றும் அதிகாரிகள் இதுகுறித்து உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள், மாணவ, மாணவிகள், சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுக்கின்றனா்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...