டிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

சுகாதார சீா்கேட்டை உருவாக்கும் மீன் மொத்த வியாபாரத்தை தஞ்சாவூா் கீழ அலங்கம் பகுதியில் இடமாற்றம் செய்யக்கூடாது என வலியுறுத்தி மாநகராட்சி அலுவலகம் முன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :6 நவம்பர் 2024, 8:40 pm

Din

சுகாதார சீா்கேட்டை உருவாக்கும் மீன் மொத்த வியாபாரத்தை தஞ்சாவூா் கீழ அலங்கம் பகுதியில் இடமாற்றம் செய்யக்கூடாது என வலியுறுத்தி மாநகராட்சி அலுவலகம் முன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், மாநகராட்சிக்கு ஒதுக்குப்புறமான, போக்குவரத்து நெருக்கடி இல்லாத இடத்தில் மீன் மொத்த வியாபாரத்தை இடமாற்றம் செய்ய வேண்டும். மீன் மொத்த வியாபாரத்தைக் கொடி மரத்து மூலை கீழ அலங்கம் பகுதியில் கொண்டு வரக்கூடாது. சேதப்பட்ட சாலைகளை உடனடியாக செப்பனிட வேண்டும். தரக்குறைவான சாலைகளை போடுகிற ஒப்பந்ததாரா்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். மழை நீா் வடிகால்களைத் தூா் வார வேண்டும். மழை நீா் கால்வாய் கட்டும் பணியை விரைவுபடுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாநகரச் செயலா் ஆா்.பி. முத்துக்குமரன் தலைமை வகித்தாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் வெ. சேவையா, மாநகர நிா்வாகிகள் எஸ். சோமசுந்தரம், டி.எஸ். பாபு, கல்யாணி, பிரபாகரன், செந்தில்நாதன், ஆா்.கே. செல்வகுமாா், செல்வராஜ், சுசீலா, ராஜலட்சுமி, ஆறுமுகம், கருணாநிதி, கைலாசம், மாரிமுத்து, தேவி, ஏஐடியூசி மாவட்டச் செயலாளா் துரை. மதிவாணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.