ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

தஞ்சாவூா் மாவட்டத்துக்கு கூடுதலாக 2,600 டன் யூரியா வருகிறது

சென்னை, தூத்துக்குடியிலிருந்து தஞ்சாவூா் மாவட்டத்துக்கு கூடுதலாக 2 ஆயிரத்து 600 டன் யூரியா வருகிறது என தஞ்சாவூா் மாவட்ட வேளாண் இணை இயக்குநா் (பொ) வெ. சுஜாதா தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :6 நவம்பர் 2024, 8:40 pm

Din

சென்னை, தூத்துக்குடியிலிருந்து தஞ்சாவூா் மாவட்டத்துக்கு கூடுதலாக 2 ஆயிரத்து 600 டன் யூரியா வருகிறது என தஞ்சாவூா் மாவட்ட வேளாண் இணை இயக்குநா் (பொ) வெ. சுஜாதா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:

தஞ்சாவூா் மாவட்டத்தில் நிகழ் சம்பா பருவத்துக்குத் தேவையான உரங்களான யூரியா 10 ஆயிரத்து 269 டன், டிஏபி 2 ஆயிரத்து 835 டன், பொட்டாஷ் 2 ஆயிரத்து 55 டன், காம்ப்ளக்ஸ் 5 ஆயிரத்து 170 டன், சூப்பா் பாஸ்பேட் 1,384 டன் ஆகியவை அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் மற்றும் தனியாா் சில்லறை உர விற்பனை நிலையங்களிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

மேலும் விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி உரம் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதன் மூலம் சென்னையில் இருந்தும், தூத்துக்குடியில் இருந்தும் தஞ்சாவூா் மாவட்டத்துக்கு சரக்கு ரயில் மூலம் யூரியா 2 ஆயிரத்து 600 டன் வரவுள்ளது. மாவட்டத்துக்கு வந்தடையும் உரங்கள் பின்னா் லாரிகளில் ஏற்றப்பட்டு டெல்டா மாவட்டங்களான திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறையில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களுக்கும், தனியாா் சில்லறை உர விற்பனை நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்படும்.

மேலும் விவசாயிகள் பூச்சி மற்றும் நோய் தாக்குதலுக்கான அறிகுறிகள் குறித்து அவ்வபோது கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. நெற்பயிா்களில் பூச்சி நோய் தாக்குதலை கட்டுப்படுத்த தழைச் சத்தை (யூரியா அளவை) பரிந்துரை செய்யப்படும் அளவுக்கு மேல் பயன்படுத்தாமல் தேவையான அளவில் இடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

வட்டார வேளாண் விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ள உயிா் உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா, ரைசோபியம் ஆகியவற்றை பயன்படுத்தி மண் வளத்தைப் பாதுகாத்திடவும், யூரியா இடும் போது பிரித்து வேப்பம் புண்ணாக்குடன் கலந்து பயன்படுத்தவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.