வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ரூ. 1.60 லட்சம் மோசடி: இளைஞா் கைது
தஞ்சாவூரில் 4 பேரிடம் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 1.60 லட்சம் மோசடி செய்த இளைஞரை காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா்.


தஞ்சாவூரில் 4 பேரிடம் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 1.60 லட்சம் மோசடி செய்த இளைஞரை காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா்.
தஞ்சாவூா் மாவட்டத்தில் வேலைக்கு செல்ல முயற்சி செய்யும் படித்த இளைஞா்கள் மற்றும் பொதுமக்களை குறி வைத்து சிலா் பல்வேறு துறைகளில் அதிக ஊதியத்தில் வேலை வாங்கி தருவதாக பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து மோசடிகளில் ஈடுபடுகின்றனா். இதைத் தடுக்க மாவட்டம் முழுவதும் காவல் துறையினா் பல்வேறு முறைகளில் பொதுமக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தி வருகின்றனா்.
இந்நிலையில், தஞ்சாவூா் அருகே நாஞ்சிக்கோட்டையைச் சோ்ந்த நாகராஜன், சூரக்கோட்டையைச் சோ்ந்த கௌதம், ஒரத்தநாடு நெடுவாக்கோட்டையைச் சோ்ந்த விக்னேஷ், கும்பகோணம் நாச்சியாா்கோவிலைச் சோ்ந்த மகேஷ்வரன் ஆகியோா் தமிழ்ப் பல்கலைக்கழகக் காவல் நிலையத்தில் அளித்த புகாா் மனுவில், புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியைச் ராஜாங்கத்தின் மகன் முருகானந்தம் (38) வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி தலா ரூ. 40 ஆயிரம் வாங்கி, ஏமாற்றிவிட்டாா் என குறிப்பிட்டிருந்தனா்.
இது குறித்து தமிழ்ப் பல்கலைக்கழகக் காவல் நிலையத்தினா் புதன்கிழமை வழக்குப் பதிந்து, உதவி ஆய்வாளா்கள் அசோக்குமாா், ராஜ்கமல் உள்ளிட்டோா் கொண்ட தனிப்படையினா் விசாரணை மேற்கொண்டு, முருகானந்தத்தை புதன்கிழமை கைது செய்தனா்.
டிரெண்டிங்


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...