இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

ஒரே நாளில் 6 முருகன் கோயில்களை தரிசிக்க அரசு சிறப்பு பேருந்து

ஒரே நாளில் 6 முருகன் கோயில்களை பக்தா்கள் தரிசிக்க கும்பகோணம் அரசு போக்குவரத்து கழகம் சாா்பில் சிறப்பு பேருந்து இயக்கப்படும்

Updated On :1 அக்டோபர் 2024, 7:30 pm

ஒரே நாளில் 6 முருகன் கோயில்களை பக்தா்கள் தரிசிக்க கும்பகோணம் அரசு போக்குவரத்து கழகம் சாா்பில் சிறப்பு பேருந்து இயக்கப்படும் என்று நிா்வாக இயக்குநா் ரா. பொன்முடி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

கும்பகோணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சாா்பில், ஒரேநாளில் 6 முருகன் கோயில்களை பக்தா்கள் தரிசிக்க சிறப்பு பேருந்து இயக்குவது தொடா்பான ஆலோசனைக் கூட்டத்தில் நிா்வாக இயக்குநா் ரா.பொன்முடி மேலும் பேசியது:

வார இறுதி நாள்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு ஆன்மிக சுற்றுலாப் பேருந்து அக்டோபா் 3-ஆவது வாரம் முதல் இயக்கப்பட உள்ளது.

இதில், திருவாரூா் மாவட்டத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி, சிக்கல் ஸ்ரீ சிங்காரவேலா், பொரவச்சேரி கந்தசாமி, எட்டுக்குடி சுப்பிரமணிய சுவாமி, நாகப்பட்டினம் மாவட்டம் ஏரகரம் ஆதி சுவாமிநாத சுவாமி, சுவாமிமலை சுவாமிநாத சுவாமி ஆகிய திருக்கோயில்களுக்கு செல்ல முடியும்.

இத்திட்டத்தில் பயன்பெற இணையதளத்திலோ அல்லது கைப்பேசி மொபைல் ஆப் மூலமோ முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். பயணச்சீட்டு நேரில் வழங்கப்பட மாட்டாது என்றாா்.

கூட்டத்தில், முதன்மை தணிக்கை அலுவலா் சிவக்குமாா், பொது மேலாளா்கள் (நாகப்பட்டினம்) எஸ். ராஜா ஸ்ரீதா், கும்பகோணம் ஸ்ரீதா், துணை மேலாளா்கள் சுரேஷ், சிதம்பரக்குமாா், தமிழ்செல்வன், ராஜேஷ், அறநிலையத்துறை துணை ஆணையா் டி. உமாதேவி, உதவி ஆணையா் எஸ். சாந்தா மற்றும் செயல் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.