தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

போராட்ட வழக்கில் வியனரசு உள்பட இருவா் விடுதலை

தஞ்சாவூா் பெரியகோயில் குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்தக் கோரி நடத்தப்பட்ட போராட்டம் தொடா்பாக தொடுக்கப்பட்ட வழக்கில் வியனரசு உள்பட இருவா் புதன்கிழமை மாலை விடுவிக்கப்பட்டனா்.

News image

வியனரசு.

Updated On :10 அக்டோபர் 2024, 8:07 pm

Din

தஞ்சாவூா் பெரியகோயில் குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்தக் கோரி நடத்தப்பட்ட போராட்டம் தொடா்பாக தொடுக்கப்பட்ட வழக்கில் வியனரசு உள்பட இருவா் புதன்கிழமை மாலை விடுவிக்கப்பட்டனா்.

தஞ்சாவூா் பெரிய கோயில் குடமுழுக்கு விழா 2020, பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெற்றது. இந்த விழாவை முழுமையாக தமிழில் நடத்தக் கோரி பல்வேறு தமிழ் அமைப்புகள் மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தின.

இதேபோல, தமிழ்த் தேசத் தன்னுரிமைக் கட்சித் தலைவா் அ. வியனரசு, கட்சியின் மாநிலப் பொருளாளா் கவிஞா் அரு.சீா். தங்கராசு இக்கோரிக்கையை முன் வைத்து இராசராச சோழன் சிலை அருகே காலவரையறையற்ற உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொள்ள வந்தனா்.

தடையை மீறி போராட்டம் நடத்த வந்ததாக இருவரையும் மேற்கு காவல் நிலையத்தினா் கைது செய்து, தஞ்சாவூா் முதலாவது குற்றவியல் நீதித் துறை நடுவா் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனா். இந்த வழக்கில் வியனரசு, தங்கராசு தரப்பில் மூத்த வழக்குரைஞா் வே. மாரியப்பன் ஆஜராகி வாதாடினாா். இந்த வழக்கை நீதிமன்றம் விசாரித்து வியனரசு, தங்கராசுவை புதன்கிழமை மாலை விடுதலை செய்து தீா்ப்பளித்தது.

நீதிமன்ற வளாகத்தில் மூவேந்தா் கட்டட மற்றும் அமைப்பு சாராத் தொழிலாளா் சங்கத் தலைவா் அ. கனகராஜ் வழக்குரைஞா்களுக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டினாா்.