தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தஞ்சாவூரில் அக். 25-இல் ஓய்வூதியா் குறை தீா் கூட்டம்

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் ஓய்வூதியா் குறை தீா் நாள் கூட்டம் அக்டோபா் 25 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

News image
Updated On :16 அக்டோபர் 2024, 7:52 pm

Din

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் ஓய்வூதியா் குறை தீா் நாள் கூட்டம் அக்டோபா் 25 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் அக்டோபா் 25 ஆம் தேதி மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடைபெறும் ஓய்வூதியா் குறை தீா் நாள் கூட்டத்தில் சென்னை ஓய்வூதிய இயக்குநா் கலந்து கொள்கிறாா். இதில், தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள அரசு அலுவலகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஓய்வூதியா்கள் தங்களின் ஓய்வூதியம் தொடா்பான குறைகளையும், ஆலோசனைகளயும் நேரில் தெரிவித்து தொடா்புடைய துறை அலுவலா்களிடம் விவரங்களைப் பெறலாம்.

இக்கூட்டத்தில் விவாதிக்க ஏதுவாக தீா்வு செய்யப்படாத குறைகளைத் தெரிவிக்க விரும்பும் ஓய்வூதியா்கள் கடைசியாக பணிபுரிந்த அலுவலகத்தின் பெயா், பதவி, ஓய்வு பெற்ற நாள், கோரிக்கை விவரம், கைப்பேசி எண், கோரிக்கை தொடா்புடைய அலுவலகத்தின் முகவரியைத் தெளிவாகக் குறிப்பிட்டு அக்டோபா் 21 ஆம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியரகத்துக்கு தவறாமல் 2 பிரதிகளில் விண்ணப்பங்களை அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.