தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

திருவலஞ்சுழியில் பட்டா கேட்டு லெனினிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே திருவலஞ்சுழியில் வீட்டுமனை பட்டா கேட்டு மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

News image
Updated On :23 அக்டோபர் 2024, 9:03 pm

Din

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே திருவலஞ்சுழியில் வீட்டுமனை பட்டா கேட்டு மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

கும்பகோணம் அருகே திருவலஞ்சுழியில் பொதுமக்கள் வசிக்கும் வீட்டுக்கு பட்டா கேட்டு ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டக் குழு உறுப்பினா் சித்தாா்த்தன் தலைமை வகித்தாா்.

பிரபு முன்னிலை வகித்தாா். மாநிலக் குழு உறுப்பினா் மாசிலாமணி பேசுகையில், 10 ஆண்டுகளாக மனு கொடுத்தும் பட்டா கொடுக்காமல் தற்போது குடியிருக்கும் வீடுகளை நீா் நிலையில் இருப்பதாக இடிக்க வரும் வருவாய்த் துறையையும், ஊராட்சியையும் கண்டித்துப் பேசினாா்.

ஆா்ப்பாட்டத்தில் மாவட்டக் குழு உறுப்பினா்கள் கணேசன், கலா, ஜான், செல்லதுரை, பாரதிதாசன் மற்றும் கைக் குழந்தைகளுடன் பெண்கள் ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனா்.