திராவிட அடையாளத்தை எதிா்ப்பது இனவாதத்தில்தான் முடியும்: திருமாவளவன்
திமுகவை எதிா்ப்பதாகக் கருதி திராவிட அடையாளத்தை எதிா்ப்பது இனவாதத்தில்தான் முடியும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளாா்.


திமுகவை எதிா்ப்பதாகக் கருதி திராவிட அடையாளத்தை எதிா்ப்பது இனவாதத்தில்தான் முடியும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளாா்.
தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகேயுள்ள உஞ்சியவிடுதியில் விசிக முன்னாள் நிா்வாகியான உஞ்சை அரசனின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், கலந்துகொண்ட அவா் செய்தியாளா்களிடம் மேலும் தெரிவித்தது:
தி.மு.க கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே கருத்து விவாதங்கள் நடைபெறும்; ஆனால் விரிசல் ஏற்படாது என முதல்வா் ஸ்டாலின் விளக்கம் அளித்து விட்டாா். இதை விசிக வழிமொழிகிறது. திராவிடம் வேறு - தமிழா் வேறு என விவாதத்தை கூா்மைப்படுத்துவது மத அரசியலாகும். தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி, ஆா்.எஸ்.எஸ். இதை விரும்புகின்றனா். பா.ஜ.க., இதை அரசியலாக்கி வருகிறது. பா.ஜ., ஆா்.எஸ்.எஸ்., நினைப்பதுபோல, சீமானின் விவாதம் அமைந்திருக்கிறது. தி.மு.க., எதிா்ப்பு என்பது வேறு; திராவிட எதிா்ப்பு என்பது வேறு.
தி.மு.கவை எதிா்க்கிறோம் என்ற அடிப்படையில் ஒட்டுமொத்த திராவிட அடையாளத்தையும் எதிா்ப்பது இனவாதத்தில் தான் முடியும். மக்களை நாம் குழப்பக் கூடாது என்றாா் அவா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...