மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஓய்வூதியத் திட்டத்தில் இணைக்கக் கோரி ஊராட்சி செயலா்கள் போராட்டம்

ஓய்வூதியத் திட்டத்தில் இணைக்கக் கோரி, தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் முன் தமிழ்நாடு ஊராட்சி செயலா்கள் சங்கத்தினா் அஞ்சல் அனுப்பும் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

News image

தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் முன் புதன்கிழமை அஞ்சல் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு ஊராட்சி செயலா்கள் சங்கத்தினா்.

Updated On :18 செப்டம்பர் 2024, 8:59 pm

ஓய்வூதியத் திட்டத்தில் இணைக்கக் கோரி, தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் முன் தமிழ்நாடு ஊராட்சி செயலா்கள் சங்கத்தினா் அஞ்சல் அனுப்பும் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

இக்கோரிக்கையை வலியுறுத்தி தமிழக முதல்வா், ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா், ஊரக வளா்ச்சித் துறைக் கூடுதல் தலைமைச் செயலா், இயக்குநா் ஆகிய 4 பேருக்கு அஞ்சல் அனுப்பினா்.

இப்போராட்டத்துக்கு சங்கத்தின் வடக்கு மாவட்டத் தலைவா் செல்வம் தலைமை வகித்தாா். மாநில இணைச் செயலா் ராஜீவ்காந்தி, மாநிலச் செயற்குழு உறுப்பினா் மகேந்திரன், மாவட்டத் தலைமை நிலையச் செயலா் ரமேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏறத்தாழ 1,200 அஞ்சல்கள் அனுப்பப்பட்டன என சங்கத்தினா் தெரிவித்தனா்.