தஞ்சாவூர்
அதிராம்பட்டினம் சாலையில் வேகத்தடை அமைக்கக் கோரிக்கை
பட்டுக்கோட்டை ரயில் நிலையம் முன்பு அதிராம்பட்டினம் சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும் என மதிமுக தலைமை செயற்குழு உறுப்பினா் உறுப்பினா் ஜெயபாரதி விசுவநாதன் நெடுஞ்சாலை துணை கோட்டச் செயற்பொறியாளருக்கு கோரிக்கை விடுத்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் புதன்கிழமை அனுப்பியுள்ள கோரிக்கை மனு:
இந்தச் சாலை பட்டுக்கோட்டை நகரத்தில் அதிக நெரிசல் மிகுந்தது. பட்டுக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் இருந்து கரிக்காடு சாலை மையத் தடுப்பு வரை எந்த வேகத்தடையும் இல்லாமல் இருப்பதால் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றன. எனவே அவசர அவசியம் கருதி பட்டுக்கோட்டை ரயில் நிலையம் முன்பு உள்ள அதிராம்பட்டினம் சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.
