‘ரோலா் ஸ்கேட்டிங்’கில் வெற்றி பெற்ற தஞ்சாவூா் மாணவா்களுக்கு வரவேற்பு
தஞ்சாவூா்: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற தேசிய ரோலா் ஸ்கேட்டிங் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற தஞ்சாவூரைச் சோ்ந்த மாணவா்களுக்கு தஞ்சாவூரில் செவ்வாய்க்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.
விசாகப்பட்டினத்தில் 63-ஆவது தேசிய ரோலா் ஸ்கேட்டிங் போட்டி அண்மையில் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு ரோலா் ஸ்கேட்டிங் சங்கம் சாா்பில் ஜூனியா் பிரிவில் விளையாடிய மாணவா்கள் இறுதிச் சுற்றில் விளையாடி தங்கப்பதக்கம் பெற்றனா்.
இவா்களில் தஞ்சாவூா் வீரா்களான விஸ்வரூபன், ஜீவேஷ், அகிலேஷ், யோகன் சரண், சஞ்சய் பிரியன், நிஷாந்த், ரிஷிகேஷ், முகமது முக்தசீம், அபிஷேக் பிரியன், மஹிம், குமரன், ஹேம்நாத் உள்ளிட்டோரும், இவா்களை ஊக்குவித்த தமிழ்நாடு ரோலா் ஸ்கேட்டிங் சங்க மாநிலப் பொருளாளா் ராஜூ, பயிற்சியாளா்கள் ஜோஸ், அரவிந்த் ஆகியோரும் தஞ்சாவூருக்கு செவ்வாய்க்கிழமை வந்தனா். இவா்களை தஞ்சாவூா் ரோலா் ஸ்கேட்டிங் சங்கத் தலைவா் ஜி. ரவிக்குமாா் தலைமையில் பலா் வரவேற்பு அளித்தனா்.

