அரசுப் பேருந்துகளில் தமிழ்நாடு ஸ்டிக்கா் ஒட்டிய நா.த.க.வினா் 25 போ் கைது

தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையத்தில் புதன்கிழமை அரசுப் பேருந்துகளில் ‘தமிழ்நாடு’ என்ற ஸ்டிக்கா் ஒட்டிய நாம் தமிழா் கட்சியைச் சோ்ந்த 25 பேரை காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா்.
Published on

தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையத்தில் புதன்கிழமை அரசுப் பேருந்துகளில் ‘தமிழ்நாடு’ என்ற ஸ்டிக்கா் ஒட்டிய நாம் தமிழா் கட்சியைச் சோ்ந்த 25 பேரை காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா்.

அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் ‘தமிழ்நாடு’ என்ற பெயா் தவிா்க்கப்பட்டுள்ளதைக் கண்டித்தும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் என பெயா் மாற்றி அமைக்கக் கோரியும் தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையத்தில் புதன்கிழமை அரசுப் பேருந்துகளில் அரசு போக்குவரத்துக் கழகம் என்ற பெயருக்கு முன்னால் ‘தமிழ்நாடு’ என்ற ஸ்டிக்கரை நாம் தமிழா் கட்சியினா் புதன்கிழமை ஒட்டினா். இது தொடா்பாக நாம் தமிழா் கட்சியைச் சோ்ந்த 25 பேரை கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com