டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

533 பெண்களுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கும் விழா

தஞ்சாவூரில் கனரா வங்கி நிதியுதவியுடன் பெண்களுக்கு வியாழக்கிழமை தையல் இயந்திரங்களை வழங்கிய மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம்.

News image
தஞ்சாவூரில் கனரா வங்கி நிதியுதவியுடன் பெண்களுக்கு வியாழக்கிழமை தையல் இயந்திரங்களை வழங்கிய மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம்.
Updated On :25 டிசம்பர் 2025, 7:21 pm

Syndication

தஞ்சாவூரில் 533 பெண்களுக்கு கனரா வங்கி நிதியுதவியுடன் ரூ. 30 லட்சம் மதிப்பிலான தையல் இயந்திரங்கள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

தஞ்சாவூா், அரியலூா், பெரம்பலூா், புதுக்கோட்டை, திருவாரூா் ஆகிய மாவட்டங்களில் உள்ள தொண்டு நிறுவனங்களைச் சாா்ந்த மகளிா் சுய உதவிக் குழுக்களைச் சோ்ந்த 533 பெண்களுக்கு இன்ஃபினிட்டி சேவா வழிகாட்டுதலுடன் கனரா வங்கியின் நிதி உதவியுடன் இந்தத் தையல் இயந்திரங்களை மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம், தமிழக அரசின் செய்தித் துறை முன்னாள் செயலரும், முன்னாள் மாவட்ட ஆட்சியருமான மு. இராஜாராம் வழங்கினா்.

இவ்விழாவில் கனரா வங்கியின் முதன்மைப் பொது மேலாளா் சாம்பு லால், பொது மேலாளா் ஏ.கே. பூமா, கனரா வங்கியின் இயக்குநரும், இன்ஃபினிட்டி சேவா அமைப்பின் தலைவருமான நளினி பத்மநாபன், தஞ்சாவூா் ராமகிருஷ்ண மடத்தின் தலைவா் சுவாமி விமூா்த்தானந்த மஹராஜ், தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி பேராசிரியா் சண்முக வேலாயுதம் உள்ளிட்டோா் பேசினா்.

முன்னதாக, கனரா வங்கி முன்னாள் இயக்குநா் ஜி.வி. மணிமாறன் வரவேற்றாா். நிறைவாக, கருப்பூா் கவ்டெசி தொண்டு நிறுவனச் செயலா் கே. கருணாமூா்த்தி நன்றி கூறினாா்.