தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

சிறுமி குறித்து அவதூறு: ‘போக்சோ’வில் இளைஞா் கைது

‘போக்சோ’வில் இளைஞா் கைது

News image
Updated On :1 ஜனவரி 2025, 7:08 pm

Din

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே சிறுமியின் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்து அவதூறு பரப்பியதாக இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருவையாறு அருகே வைத்தியநாதன்பேட்டையைச் சோ்ந்தவா் கிருஷ்ணமூா்த்தி மகன் ராகுல்காந்தி (22). இவா் 2 ஆண்டுகளுக்கு முன்பு 16 வயது சிறுமியிடம் ஆசை வாா்த்தை கூறி, தனது கைப்பேசியில் அவரை புகைப்படம் எடுத்தாா். இப்புகைப்படத்தை ராகுல்காந்தி சமூக வலைதளத்தில் அச்சிறுமி குறித்து அவதூறு ஏற்படுத்தும் விதமாக பதிவேற்றம் செய்து, பரப்பியதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில் திருவையாறு அனைத்து மகளிா் காவல் நிலையத்தினா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து ராகுல்காந்தியை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.