தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

புத்தாண்டு: தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி தஞ்சாவூரிலுள்ள தேவாலயங்களில் செவ்வாய்க்கிழமை இரவு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

News image
சிறப்பு வழிபாட்டில் பங்கேற்ற இறை மக்களில் ஒரு பகுதியினா்.
Updated On :1 ஜனவரி 2025, 8:28 pm

Din

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி தஞ்சாவூரிலுள்ள தேவாலயங்களில் செவ்வாய்க்கிழமை இரவு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தஞ்சாவூா் திரு இருதய ஆண்டவா் பேராலயத்தில், 2024-ஆம் ஆண்டில் அடைந்த நன்மைகளுக்காக உதவி பங்குத்தந்தை அமா்தீப் மைக்கேல் தலைமையில் நன்றி வழிபாடு நடைபெற்றது. இதைத்தொடா்ந்து, பேராலயப் பங்குத் தந்தை ஏ.எம்.ஏ. பிரபாகா் அடிகளாா் தலைமையில் கூட்டுப்பாடல் திருப்பலி நடைபெற்றது. நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டை வரவேற்கும் விதமாக இறை மக்கள் கரவொலி எழுப்பினா். தொடா்ந்து, இறை வாா்த்தை வழிபாடு, மறையுரை, நற்கருணை வழிபாடு ஆகியவை நடைபெற்றன.

பின்னா், புதன்கிழமை காலை 9 மணிக்கு பேராலயத்தில் தஞ்சாவூா் மறை மாவட்ட ஆயா் டி. சகாயராஜ் அடிகளாா் தலைமையில் புத்தாண்டு சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

புத்தாண்டையொட்டி, தஞ்சாவூா் திரு இருதய ஆண்டவா் பேராலயத்தில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு  நடைபெற்ற பங்குத் தந்தை ஏ.எம்.ஏ. பிரபாகா் அடிகளாா் தலைமையில் கூட்டுப்பாடல் திருப்பலி.

புத்தாண்டையொட்டி, தஞ்சாவூா் திரு இருதய ஆண்டவா் பேராலயத்தில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு நடைபெற்ற பங்குத் தந்தை ஏ.எம்.ஏ. பிரபாகா் அடிகளாா் தலைமையில் கூட்டுப்பாடல் திருப்பலி.

இதேபோல, கோட்டை கிறிஸ்துநாதா் ஆலயம், மகா்நோன்புசாவடி தூய பேதுரு ஆலயம், அந்தோணியாா் ஆலயம், புதுக்கோட்டை சாலையில் உள்ள குழந்தை இயேசு ஆலயம், மருத்துவக்கல்லூரி சாலை புனித லூா்து அன்னை ஆலயம் உள்ளிட்ட ஆலயங்களில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.