தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

மாநகராட்சிகள் விரிவாக்க முடிவை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்: பாபநாசம் எம்எல்ஏ

மாநகராட்சிகள் மற்றும் பேரூராட்சிப் பகுதிகளை விரிவாக்கம் செய்யும் முடிவை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பாபநாசம் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினா் எம்.ஹெச். ஜவாஹிருல்லா கோரிக்கை விடுத்துள்ளாா்.

News image
Updated On :2 ஜனவரி 2025, 11:16 pm

Din

மாநகராட்சிகள் மற்றும் பேரூராட்சிப் பகுதிகளை விரிவாக்கம் செய்யும் முடிவை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பாபநாசம் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினா் எம்.ஹெச். ஜவாஹிருல்லா கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் சட்டப்பேரவை தொகுதி, அம்மாப்பேட்டை ஒன்றியம், ஆலங்குடி ஊராட்சியில் உள்ள அருள்மொழிப்பேட்டை கிராமம், புலவா்நத்தம் ஊராட்சி பவானியம்மாள்புரம் கிராமம் மற்றும் கத்தரிநத்தம் ஊராட்சி தளவாய்பாளையம் கிராமம் உள்ளிட்ட கிராமங்களை தஞ்சாவூா் மாநகராட்சியுடனும், கும்பகோணம் ஒன்றியத்துக்குள்பட்ட வலையப்பேட்டை ஊராட்சி அம்மாபேட்டை, வலையப்பேட்டை ஆகிய கிராமங்களை கும்பகோணம் மாநகராட்சியுடனும், பாபநாசம் ஒன்றியம், சக்கராப்பள்ளி ஊராட்சியை அய்யம்பேட்டை பேரூராட்சியுடனும் இணைக்கும் வகையில், அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இந்தக் கிராமப் பொதுமக்கள், தோ்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் ஆகியோரின் கருத்துகளை முறைப்படி கேட்காமல் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்புகள் இங்கு வசிக்கும் மக்களிடையே பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் 100 நாள் வேலை உறுதித் திட்டப் பணிகள் இழப்பு, வரி விகிதங்கள் அதிகரிப்பு போன்ற இழப்புகளை கிராம மக்கள் சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பாபநாசம் சட்டப்பேரவைத் தொகுதியைச் சோ்ந்த இந்தக் கிராமங்களை விடுவிக்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.