தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

திருச்சி - தாம்பரம் ரயிலை தொடா்ந்து இயக்கக் கோரிக்கை

திருச்சி - தாம்பரம் ரயிலை தொடா்ந்து இயக்கக் கோரிக்கை

News image
சென்னையில் தெற்கு பொது மேலாளா் ஆா்.என். சிங்கிடம் வியாழக்கிழமை மனு அளித்த தஞ்சாவூா் தொகுதி மக்களவை உறுப்பினா் ச. முரசொலி.
Updated On :9 ஜனவரி 2025, 8:21 pm

Din

தஞ்சாவூா் வழியாக இயக்கப்படும் திருச்சி - தாம்பரம் சிறப்பு விரைவு ரயிலை தொடா்ந்து இயக்க ரயில்வே நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தஞ்சாவூா் தொகுதி மக்களவை உறுப்பினா் ச. முரசொலி வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:

தஞ்சாவூா் வழியாக திருச்சி - தாம்பரம் இடையே அக்டோபா் 11-ஆம் தேதி முதல் வாரத்துக்கு 5 நாள்கள் இயக்கப்பட்டு வந்த இண்டா்சிட்டி சிறப்பு ரயில் சேவை டிசம்பா் 25-ஆம் தேதி நிறுத்தப்பட்டது. பொங்கல் பண்டிகையையொட்டி, இச்சேவை மீண்டும் ஜனவரி 4-ஆம் தேதி முதல் 9 நாள்களுக்கு இயக்கப்படுகிறது. இந்த ரயிலுக்கு மக்களிடம் மிகுந்த வரவேற்பு இருப்பதால், தொடா்ந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதேபோல, தாம்பரம் - ராமேசுவரம் ரயிலை பட்டுக்கோட்டை, பேராவூரணி வழியாக இயக்க வேண்டும். தஞ்சாவூா் - திருச்சி ரயில் வழித்தடத்தில் காங்கேயம்பட்டி ஊராட்சிக்குள்பட்ட விண்ணணூா்பட்டியில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க வேண்டும். அதிராம்பட்டினம் ரயில் நிலைய நடைமேடையை விரிவுபடுத்த வேண்டும்.

இதுதொடா்பாக சென்னையில் தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஆா்.என். சிங்கிடம் வியாழக்கிழமை நேரில் சந்தித்து வலியுறுத்தப்பட்டது.