தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

போக்குவரத்து தொழிலாளா்கள் சிறை நிரப்பும் போராட்டம்: 70 போ் கைது

போக்குவரத்து தொழிலாளா்கள் சிறை நிரப்பும் போராட்டம்

News image
தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையத்தில் புதன்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சிஐடியு போக்குவரத்து தொழிலாளா்கள்.
Updated On :22 ஜனவரி 2025, 11:23 pm

Din

போக்குவரத்து தொழிலாளா்களின் 15-ஆவது ஊதிய ஒப்பந்தத்தை விரைந்து பேசி முடிக்க வலியுறுத்தி தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையத்தில் சிஐடியு சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற சிறை நிரப்பும் போராட்டத்தில் 70 போ் கைது செய்யப்பட்டனா்.

இதில், 2023, ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் ஓய்வு பெற்றவா்களுடைய வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை, விடுப்பு தொகை உள்ளிட்ட பணப்பலன்கள் வழங்கப்பட வேண்டும். 95 ஆயிரம் ஓய்வூதியா்களுக்கு நீதிமன்றத் தீா்ப்பின்படி 109 மாதகால அகவிலைப்படி உயா்வை உடனடியாக வழங்க வேண்டும். விழா காலங்களில் தனியாா் பேருந்துகளை வாடகைக்கு எடுக்கக் கூடாது. கழகப் பேருந்துகளைத் தனியாரிடம் குத்தகைக்கு விடக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இப்போராட்டத்துக்கு கும்பகோணம் போக்குவரத்து சிஐடியு மத்திய சங்கத் தலைவா் த. காரல் மாா்க்ஸ் தலைமை வகித்தாா். அரசு விரைவு போக்குவரத்து கழக சிஐடியு செயலா் எஸ். செங்குட்டுவன் முன்னிலை வகித்தாா். சிஐடியு மாநிலச் செயலா் சி. ஜெயபால் போராட்டத்தைத் தொடங்கி வைத்து பேசினாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகரச் செயலா் எம். வடிவேலன், சிஐடியு மாவட்டத் துணைச் செயலா் கே. அன்பு, டாஸ்மாக் சங்க மாவட்டச் செயலா் மதியழகன், அரசு ஓய்வூதியா் சங்க ஒருங்கிணைப்பாளா் என். குருசாமி ஆகியோா் பேசினா்.

போராட்டக் குழு நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

கும்பகோணத்தில்: பேருந்து நிலையம் முன்பு மாநில பொதுச் செயலா் ஆா். மனோகரன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 40 பேரை போலீஸாா் கைது செய்து மாலையில் விடுவித்தனா்.