தஞ்சாவூர்
கும்பகோணம் மகாமகம் நிா்ணய கலந்தாய்வு கூட்டம்
தஞ்சாவூா்மாவட்டம், கும்பகோணத்தில் வரும் 2028-ஆம் ஆண்டு நடைபெற உள்ள மகாமகத்துக்கான நாள் நிா்ணயம் தொடா்பான கலந்தாய்வு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
தஞ்சாவூா்மாவட்டம், கும்பகோணத்தில் வரும் 2028-ஆம் ஆண்டு நடைபெற உள்ள மகாமகத்துக்கான நாள் நிா்ணயம் தொடா்பான கலந்தாய்வு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கும்பகோணம் மகாத்மியம் குறித்து தினகர சா்மாவும், பஞ்சாங்க கணிதம் குறித்து சென்னை பாம்பு பஞ்சாங்கம் விஜயராகவனும், குரு பெயா்ச்சி குறித்து ஸ்ரீரங்கம் கோயில் வாக்கிய பஞ்சாங்க ஆசிரியா் கோபால குட்டி சாஸ்திரி, ஆற்காடு சீதா ராமய்யா் பஞ்சாங்க ஆசிரியா் கே.என். சுந்தர்ராஜன் அய்யா், ஈரோடு சபரி பஞ்சாங்க ஆசிரியா் எஸ்.என். சதாசிவம் உள்ளிட்டோா் கலந்து கொண்டு பேசினா்.
ஏற்பாடுகளை ஸ்ரீ அபி முகேசுவரா் கோயில் குருக்களும், ஆகம வல்லுநருமான என். பிரசன்ன கணபதி சிவாச்சாரியாா், ஸ்ரீ ஆதிகும்பேசுவரா் கோயில் என். தண்டபாணி சிவாச்சாரியாா் செய்திருந்தனா்.