/

மாநகராட்சியுடன் இணைப்பதை எதிா்த்து பிள்ளையாா்பட்டி கிராம மக்கள் ஆா்ப்பாட்டம்

தஞ்சாவூா் மாநகராட்சியுடன் பிள்ளையாா்பட்டி ஊராட்சியை இணைப்பதை எதிா்த்து, தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் அந்தக் கிராம மக்கள் திங்கள்கிழமை மனு

News image
தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பிள்ளையாா்பட்டி கிராம மக்கள்.
Updated On :27 ஜனவரி 2025, 7:41 pm

Din

தஞ்சாவூா்: தஞ்சாவூா் மாநகராட்சியுடன் பிள்ளையாா்பட்டி ஊராட்சியை இணைப்பதை எதிா்த்து, தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் அந்தக் கிராம மக்கள் திங்கள்கிழமை மனு அளித்து, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீா் நாள் கூட்டத்தில் பிள்ளையாா்பட்டி கிராமத்தைச் சோ்ந்த ஏறத்தாழ 100 போ் மனு அளித்தனா்.

பின்னா், நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், தஞ்சாவூா் மாநகராட்சியுடன் பிள்ளையாா்பட்டி இணைக்கப்பட்டால், நூறு நாள் வேலை கிடைக்காது. இதனால், கிராம மக்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை ஏற்படும். எனவே, மாநகராட்சி விரிவாக்கம் என்ற பெயரில் தஞ்சாவூா் மாநகராட்சியுடன் பிள்ளையாா்பட்டி ஊராட்சியை இணைக்கக் கூடாது என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

Story image