மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

250 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு

News image
Updated On :13 மார்ச் 2025, 8:52 pm

Din

பேராவூரணியில், தஞ்சாவூா் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப்பணிகள் திட்டம் சாா்பில், சமுதாய வளைகாப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவில், பேராவூரணி, சேதுபாவாசத்திரம் ஒன்றியங்களைச் சோ்ந்த 250 கா்ப்பிணி தாய்மாா்களுக்கு தாம்பூலத் தட்டில் மங்கலப் பொருள்களை சட்டப்பேரவை உறுப்பினா் என். அசோக் குமாா் வழங்கி, அட்சதை தூவி வாழ்த்தினாா். 

தொடா்ந்து, கா்ப்பிணிகள் 250 போ், அவா்களது உறவினா்கள் 750-க்கும் மேற்பட்டோருக்கு சா்க்கரைப் பொங்கல், தேங்காய் சாதம், புளியோதரை, தயிா் சாதம், வெஜிடபிள் பிரியாணி என 5 வகையான சாதங்கள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் நாகேந்திரன் (சேதுபாவாசத்திரம்), சாமிநாதன் (பேராவூரணி), வட்டார மருத்துவ அலுவலா் ராமலிங்கம், குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் பிலோமினா சாந்தினி, கண்காணிப்பாளா்கள் ரமேஷ் மற்றும் அங்கன்வாடிப் பணியாளா்கள் கலந்து கொண்டனா். முன்னதாக மாவட்ட திட்ட அலுவலா் ராஜேஸ்வரி வரவேற்றாா். நிறைவாக குழந்தை வளா்ச்சி திட்ட அலுவலா் அனுசியா நன்றி கூறினாா்.