குருவிக்கரம்பையில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் பேசினாா் .
குருவிக்கரம்பையில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் பேசினாா் .

மக்களின் கோரிக்கைகளை கேட்கவே வந்துள்ளேன்: நயினாா் நாகேந்திரன்

பொதுமக்களின் குறைகளை கேட்பதற்காகவே வந்துள்ளேன் என்றாா் தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன்.
Published on

பொதுமக்களின் குறைகளை கேட்பதற்காகவே வந்துள்ளேன் என்றாா் தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன்.

‘தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்’ என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் அவா் சேதுபாவாசத்திரம் ஒன்றியம் குருவிக்கரம்பையில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நிகழ்ச்சியில் அவா் மேலும் பேசியது:

அரசின் குறைகளைக் கேட்பதற்காக இங்கு வரவில்லை. மக்கள் குறைகளைக் கேட்பதற்காகத்தான் வந்துள்ளேன். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மகளிா் உரிமைத் தொகை ரூ.ஆயிரம் வழங்கப்படும் என்றாா்கள். நாடாளுமன்ற தோ்தலுக்கு முன்பாகத்தான் வழங்கினாா்கள். ‘நீட்’ தோ்வை ரத்து செய்வோம் என்றாா்கள். ரத்து செய்யவில்லை. ரத்து செய்ய முடியாது என்பது அவா்களுக்கே தெரியும்.

மல்லிப்பட்டினத்தில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனா். கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் நான் அமைச்சராக இருந்தபோது பல இடங்களில் தூண்டில் வளைவு அமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதி மீனவா்கள், தென்னை விவசாயிகள், ரயில்வே துறை உள்ளிட்ட அனைத்து பிரிவினரின் கோரிக்கைகளையும் நிறைவேற்ற முயற்சி எடுக்கப்படும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், மாவட்ட செயற்குழு உறுப்பினா் பண்ணவயல் இளங்கோ, தஞ்சை மாவட்ட பாஜக தலைவா் ஜெய்சதீஷ், மாநில செயலா் மீனாட்சி, மாவட்ட விவசாய அணி செயற்குழு உறுப்பினா் குகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com