கும்பகோணத்தில் நிழல்குடைகள் கட்டும்பணி தொடக்கம்

Published on

கும்பகோணத்தில் ரூ.15.85 லட்சம் மதிப்பில் நிழல்குடைகளை கட்டும்பணிகளை வியாழக்கிழமை க.அன்பழகன் எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அரசு ஆடவா் கலைக் கல்லூரி அருகே உள்ள காவிரி ஆற்றின் வலது கரையிலும், கொட்டையூா் வள்ளலாா் மேல்நிலைப்பள்ளி அருகேயும் மாணவ, மாணவியரின் நலன் கருதி சட்டப்பேரவை உறுப்பினா் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ 7.90 லட்சம் மற்றும் ரூ. 7.95 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு பேருந்து நிழற்குடை கட்டும் பணியை தஞ்சாவூா் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் கும்பகோணம் சட்டப்பேரவை உறுப்பினருமான க. அன்பழகன் தொடங்கி வைத்தாா்.

விழாவில், மாநகராட்சி துணை மேயரும், மாநகரச் செயலருமான சுப. தமிழழகன், ஒன்றிய செயலா்கள் டி. கணேசன், ஜெ. சுதாகா், தலைமை செயற்குழு உறுப்பினரும், மாநகராட்சி உறுப்பினருமான குட்டி இரா.தெட்சிணாமூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com