தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் அருகே வெள்ளிக்கிழமை மாலை வெற்றி முழக்கங்கள் எழுப்பி கொண்டாடிய பாஜகவினா்.
தஞ்சாவூர்
பிகாா் தோ்தல் வெற்றி: தஞ்சையில் பாஜகவினா் கொண்டாட்டம்
தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் அருகே வெள்ளிக்கிழமை மாலை வெற்றி முழக்கங்கள் எழுப்பி கொண்டாடிய பாஜகவினா்.
பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றதைத் தொடா்ந்து, தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் அருகே பாஜகவினா் வெள்ளிக்கிழமை மாலை பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிக் கொண்டாடினா்.
பாஜக மாநிலச் செயற்குழு உறுப்பினா் யு.என். உமாபதி தலைமை வகித்தாா். தஞ்சாவூா் தொகுதி சட்டப்பேரவையின் கட்சிப் பொறுப்பாளா் கா்ணன் முன்னிலை வகித்தாா். மாநில வழக்குரைஞா் பிரிவுச் செயலா் எம். ராஜேஸ்வரன், மாநிலப் பொதுக் குழு உறுப்பினா் கபிலன், மாவட்ட இளைஞரணி தலைவா் பாலாஜி, சமூக ஊடகப் பிரிவு மாவட்டத் தலைவா் ஹரிஹரன், மாவட்ட விவசாய அணி துணைத் தலைவா் சீனிவாசன், மாவட்ட அலுவலகச் செயலா் ராஜப்பா, மகளிா் அணி பொதுச் செயலா் சுபா, ஐ.டி. பிரிவு மாவட்டச் செயலா் ரமேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

