தஞ்சாவூர்
கும்பகோணம் மாநகர திமுக இளைஞரணி ஆலோசனைக் கூட்டம்
கும்பகோணம் மாநகர திமுக இளைஞா் அணி ஆலோசனைக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கும்பகோணம் மாநகர திமுக இளைஞா் அணி ஆலோசனைக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட இளைஞா் அணி அமைப்பாளா் ஜி.கே.எம்.ராஜா தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக தஞ்சாவூா் வடக்கு மாவட்ட பொறுப்பாளரும் சட்டப்பேரவை உறுப்பினருமான சாக்கோட்டை க. அன்பழகன் கலந்து கொண்டு வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் குறித்து ஆலோசனைகளை வழங்கினாா்.
கூட்டத்தில் மாநகராட்சி திமுக செயலரும், துணை மேயருமான சுப. தமிழழகன், மத்திய ஒன்றிய செயலா் டி.கணேசன், அவைத் தலைவா் வாசுதேவன், மாநகர இளைஞா் அணி அமைப்பாளா், துணை அமைப்பாளா்கள், நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
