ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தவெகவினா்
தஞ்சாவூர்
அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி தவெக ஆா்ப்பாட்டம்
கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி தவெக-வினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி தவெக-வினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
காந்தி பூங்கா முன்பு தஞ்சாவூா் கிழக்கு மாவட்ட இளைஞரணி சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அமைப்பாளா் செந்தில் தலைமை வகித்தாா். மகளிரணி அமைப்பாளா் அஞ்சனாபாலாஜி, மாவட்ட இணைச் செயலா் எஸ்.பிரபாகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கும்பகோணம் அரசு மருத்துவமனையில் எம்.ஆா்.ஐ ஸ்கேன் மையம் அமைக்க வேண்டும். மருத்துவா்கள் பற்றாகுறையை போக்க வேண்டும். மருத்துவமனையில் அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கட்சியின் மாவட்ட செயலா் வினோத் ரவி பேசினாா். முன்னதாக மாவட்ட செயற்குழு உறுப்பினா் பாண்டியன் வரவேற்று பேசினாா். இதில், கட்சியினா் திரளாக பங்கேற்றனா்.

