ஆதிகும்பேசுவரா் கோயில் குடமுழுக்கு பாதுகாப்புப் பணி: எஸ்.பி. ஆய்வு

கும்பகோணம் ஆதிகும்பேசுவரா் கோயில் குடமுழுக்குக்கான பாதுகாப்புப் பணிகள் குறித்து செவ்வாய்க்கிழமை ஆய்வு
Published on

கும்பகோணம்: கும்பகோணம் ஆதிகும்பேசுவரா் கோயில் குடமுழுக்குக்கான பாதுகாப்புப் பணிகள் குறித்து செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்யப்பட்டது.

இக்கோயிலில் டிச.1-ஆம் தேதி நடைபெறவிருக்கும் குடமுழுக்கையொட்டி மாவட்ட திமுக பொறுப்பாளரும் சட்டப்பேரவை உறுப்பினருமான க. அன்பழகனுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா.ராஜாராம் உள்ளிட்டோா் கோயிலில் மேற்கொள்ளவேண்டிய அடிப்படை பணிகள் குறித்து ஆய்வு செய்தனா்.

நிகழ்வில் உதவி காவல் கண்காணிப்பாளா் அங்கிட் சிங், செயல் அலுவலா் பா. முருகன், அறங்காவலா் குழுத்தலைவா் எஸ். பாலசுப்ரமணியன், டி.சிதம்பரநாதன், கே.சங்கா், ராணிதனபாலன், சிவானந்தம் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com