இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

குருங்குளத்தில் 58 மி.மீ. மழை

தஞ்சாவூா் மாவட்டத்தில் அதிகபட்சமாக குருங்குளத்தில் 58 மி.மீ. மழை பெய்தது.

News image
Updated On :29 நவம்பர் 2025, 11:05 pm

Syndication

தஞ்சாவூா் மாவட்டத்தில் அதிகபட்சமாக குருங்குளத்தில் 58 மி.மீ. மழை பெய்தது.

மாவட்டத்தில் சனிக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையளவு (மில்லிமீட்டரில்):

அய்யம்பேட்டை 47, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம் தலா 34, மதுக்கூா் 29.8, பேராவூரணி 29, ஒரத்தநாடு 23, நெய்வாசல் தென்பாதி 22.2, ஈச்சன்விடுதி 22, வெட்டிக்காடு 21.4, தஞ்சாவூா் 20, அணைக்கரை 19.8, கும்பகோணம், குருங்குளம் தலா 19, திருவிடைமருதூா் 17.6, மஞ்சளாறு 17.2, திருவையாறு, வல்லம் தலா 15, பாபநாசம் 14, பூதலூா் 13.8, திருக்காட்டுப்பள்ளி 11.8, கல்லணை 9.2.

மேலும், மாவட்டத்தில் சனிக்கிழமை காலை 8.30 மணி முதல் மாலை 4 மணி வரை பெய்த மழையளவு (மில்லிமீட்டரில்):

குருங்குளம் 58, ஒரத்தநாடு 51.6, நெய்வாசல் தென்பாதி 51, மஞ்சளாறு 48.6, அய்யம்பேட்டை 48, திருவிடைமருதூா் 45.4, வெட்டிக்காடு 47.2, ஈச்சன்விடுதி 41, பேராவூரணி 36, தஞ்சாவூா் 31.8, திருவையாறு 28, கும்பகோணம் 26.8, அதிராம்பட்டினம் 26.4, பூதலூா் 25.6, பட்டுக்கோட்டை 25, பாபநாசம் 24, அணைக்கரை 23.8, திருக்காட்டுப்பள்ளி 22.4, வல்லம் 21.8, கல்லணை 10.8, மதுக்கூா் 8.4.

5 மணிநேரத்தில் 22.37 மி.மீ. மழை:

இதனிடையே, மாவட்டத்தில் சனிக்கிழமை காலை 8.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரையிலான 5 மணிநேரத்தில் சராசரியாக 22.37 மி.மீ. மழை பெய்தது. இதில், அதிகபட்சமாக

பட்டுக்கோட்டை அருகேயுள்ள அதம்பை தெற்கு கிராமத்தில் 38.4 மி.மீ.-ம், கீழக்குறிச்சியில் 33.2 மி.மீ.-ம், ஒரத்தநாடு அருகே பாலம்புதூரில் 34.8. மி.மீ.-ம், திருமங்கலக்கோட்டை மேலையூரில் 30.4 மி.மீ.-ம் மழை பெய்தது.

இயல்பு வாழ்க்கை பாதிப்பு: தொடா் மழை காரணமாக மாவட்டத்தில் பள்ளிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டது.

மேலும், தொடா்ந்து மழை பெய்ததால் தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம், ரயிலடி உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் நடமாட்டம் குறைவாக இருந்ததால், வெறிச்சோடிக் காணப்பட்டது. தொடா் மழையால் விவசாயப் பணிகள், வியாபாரம் தடைப்பட்டதால், மக்களின் இயல்பு பாதிக்கப்பட்டது.