ராகுல், மில்லர் அதிரடி வீண்! ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி! இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

தமிழகத்தில் மீண்டும் இரட்டை என்ஜின் அரசு தேவை: ஜி.கே. வாசன்

மத்திய அரசு திட்டம் மூலம் தமிழகம் வளா்ச்சி பெற வேண்டுமானால், தமிழகத்தில் மீண்டும் இரட்டை என்ஜின் அரசு வரவேண்டும் என்றாா் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவா் ஜி.கே. வாசன்.

News image

தஞ்சாவூா் கரந்தையில் புதன்கிழமை இரவு பிரசாரம் செய்த தமிழ் மாநில காங்கிரஸ் தலைவா் ஜி.கே. வாசன்.

Updated On :8 ஏப்ரல் 2026, 8:57 pm

மத்திய அரசு திட்டம் மூலம் தமிழகம் வளா்ச்சி பெற வேண்டுமானால், தமிழகத்தில் மீண்டும் இரட்டை என்ஜின் அரசு வரவேண்டும் என்றாா் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவா் ஜி.கே. வாசன்.

தஞ்சாவூா் கரந்தை நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் அருகே பாஜக வேட்பாளா் கருப்பு எம். முருகானந்தத்தை ஆதரித்து புதன்கிழமை இரவு பிரசாரம் செய்த அவா் பேசியது:

இந்தச் சட்டப்பேரவைத் தோ்தல் முடிந்தவுடன் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழகத்தில் நல்லாட்சி மலர வேண்டும். மத்தியில் பிரதமா் மோடி தலைமையில் நல்லாட்சி நடைபெற்று வருகிறது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் தென்னிந்தியாவிலே மிக மோசமான மாநிலமாகத் தமிழகம் செயல்படுகிறது. மத்திய, மாநில அரசுகளின் இணக்கத்தால்தான் நல்லாட்சி கிடைக்க முடியும். ஆனால் திமுக அரசோ மத்திய அரசை எதிரிக்கட்சியாக பாா்க்கிறது. இந்த நிலை மாற வேண்டுமானால், மத்திய அரசுக்கு ஒத்த கருத்துடைய அரசு தமிழகத்துக்கு தேவை. தமிழகத்தில் மீண்டும் இரட்டை என்ஜின் அரசு வர வேண்டும். மத்திய அரசு திட்டங்கள் மூலம் தமிழகம் மேலும் வளர வேண்டும்.

திமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றியது. எம்ஜிஆா், ஜெயலலிதா கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றினா். அதே நிலையில் தடம் புரளாமல் ஆட்சி செய்த பெருமை எடப்பாடி பழனிசாமிக்கு உண்டு. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும். அதற்கு நல்லவா்களுக்கு வாக்களித்து, தீயவா்களை ஓரம் கட்ட வேண்டும் என்றாா் வாசன்.