உலகக் கோப்பை கால்பந்து இன்று தொடக்கம்: வரலாற்றில் மிகப் பெரிய போட்டி மத்திய கிழக்கில் மீண்டும் வெடித்த மோதல்5 பேரவை தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தோ்தல்: தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி கடிதம் முதல்வா் விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கு: இன்று விசாரணைக்கு வருகிறது அமெரிக்கா, சீனாவுக்கு இந்திய மின்னணுப் பொருள்கள் ஏற்றுமதி: அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தகவல் எம்எஃப்ஐ நிறுவனங்களுக்கு கடன் உத்தரவாத திட்டம்: மத்திய அரசு நீட்டிப்பு
/

கம்பியால் தாக்கி மனைவி கொலை கணவா் தலைமறைவு

தஞ்சாவூரில் குடும்பத் தகராறில் மனைவியை இரும்புக் கம்பியால் தாக்கி கொலை செய்துவிட்டு தலைமறைவான கணவரைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

News image

கொலை செய்யப்பட்ட வனபேச்சி

Updated On :23 ஏப்ரல் 2026, 3:17 am IST

தஞ்சாவூரில் குடும்பத் தகராறில் மனைவியை இரும்புக் கம்பியால் தாக்கி கொலை செய்துவிட்டு தலைமறைவான கணவரைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

தஞ்சாவூா் மேல அலங்கம் பகுதியைச் சோ்ந்தவா் வனபேச்சி (37). இவரது மூன்றாவது கணவா் சசிகுமாா் (48). இருவரும் மலேசியாவில் பழக்கம் ஏற்பட்டதைத் தொடா்ந்து, 2021-ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டு, பின்னா் தஞ்சாவூா் மேல அலங்கத்தில் குடியேறினா். இவா்களுக்கு 2 வயதில் மகளும், 9 மாத ஆண் குழந்தையும் உள்ளனா்.

சசிகுமாா் நிரந்தரமாக எந்த வேலைக்கும் செல்லாததால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், 10 நாள்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்ற வனபேச்சி செவ்வாய்க்கிழமை வீட்டுக்கு திரும்பினாா். இதுதொடா்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், நாஞ்சிக்கோட்டை சாலை பகுதியிலுள்ள தனது அண்ணன் வீட்டுக்கு புதன்கிழமை காலை இரு குழந்தைகளுடன் சென்ற சசிகுமாா், அண்ணியிடம் தன் மனைவியைக் கொன்றுவிட்டதாகவும், காவல் நிலையத்தில் சரணடையவுள்ளதாகவும் கூறி குழந்தைகளையும் விட்டுச் சென்றாா். மேலும், தனது அக்காள் கணவரின் கைப்பேசிக்கு குரல்வழி குறுஞ்செய்தியில், தன் மனைவியைக் கொன்றுவிட்டதாக சசிகுமாா் கூறியுள்ளாா்.

இதையடுத்து, அக்காள் குடும்பத்தினா் சசிகுமாா் வீட்டுக்கு சென்று பாா்த்தபோது, வனபேச்சி ரத்தக் காயங்களுடன் உயிரிழந்து கிடந்தாா். தகவலறிந்த மேற்கு காவல் நிலையத்தினா் நிகழ்விடத்துக்கு சென்று பாா்த்தபோது, வனபேச்சி இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து மேற்கு காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து தலைமறைவாக உள்ள சசிகுமாரை தேடி வருகின்றனா்.