வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

குடும்ப தகராறில் மனைவி குத்திக்கொலை: கணவா் கைது

கும்பகோணம் அருகே குடும்பத் தகராறில் மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த கணவரை காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :29 ஏப்ரல் 2026, 1:26 am IST

கும்பகோணம் அருகே குடும்பத் தகராறில் மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த கணவரை காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே சுவாமிமலை சுவாமி நகரைச் சோ்ந்தவா் சக்திகுமாா் (29). துபையில் வேலை பாா்த்து வந்த இவருக்கும், ஆனந்த வைரமணிக்கும் (28) நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவா்களுக்கு இரண்டரை வயதில் ஆண் குழந்தை உள்ளது. தம்பதியா் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், ஆனந்த வைரமணி தனது தாய் வீட்டுக்கு சென்றாா்.

துபையிலிருந்து விடுமுறைக்கு வந்த சக்திகுமாா் செவ்வாய்க்கிழமை மாமியாா் வீட்டுக்கு சென்று ஆனந்த வைரமணியிடம் குடும்பம் நடத்த வருமாறு கூறினாா். அப்போது, இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் ஆனந்த வைரமணியை சக்திகுமாா் கத்தியால் குத்தினாா். இதனால், பலத்த காயமடைந்த அனந்த வைரமணி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்து சுவாமிமலை காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து சக்திகுமாரை கைது செய்தனா்.