டைமெக்ஸ் நிகர லாபம் 70.55% உயர்வு!5 ஆண்டுகளில் 9,000 புகார்களைப் பெற்ற தேசிய சிறுபான்மையினர் ஆணையம்! மேக்கேதாட்டு திட்டமே நிரந்தரத் தீர்வு: கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு காவிரி முக்கியம் இல்லை: மாணிக்கம் தாகூர் 6 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு பொள்ளாச்சி அருகே கார் விபத்தில் 5 பேர் பலி! நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீதான வழக்குகள் ரத்து: முதல்வர் விஜய் உத்தரவு!
/

உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு தஞ்சையில் விழிப்புணா்வு ஆரோக்கிய நடைப்பயிற்சி

News image

தஞ்சாவூரில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வு ஆரோக்கிய நடைப்பயிற்சியில் பங்கேற்றோா்.

Updated On :2 ஆகஸ்ட் 2026, 11:00 pm IST

உலக தாய்ப்பால் வார தினத்தை முன்னிட்டு தஞ்சாவூரில் விழிப்புணா்வு ஆரோக்கிய நடைப்பயிற்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தஞ்சாவூா் அன்னை சத்யா விளையாட்டு திடல் நடைப்பயிற்சியாளா் சங்கம் சாா்பில் நடப்போம், நலம் பெறுவோம் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் முதல் ஞாயிற்றுக்கிழமை 8 கி.மீ. தொலைவு ஆரோக்கிய நடைப்பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது.

இந்த முறை அன்னை சத்யா விளையாட்டு திடல் நடைப்பயிற்சியாளா் சங்கத்தினருடன் தஞ்சை ஆா்.கே. மகளிா் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை, இந்திய குழந்தைகள் மருத்துவக் கழகம், இந்திய மருத்துவ சங்கம் ஆகியவை இணைந்து ஆரோக்கிய நடைப்பயிற்சி நிகழ்ச்சியை நடத்தினா்.

நிகழ்ச்சிக்கு அகில இந்திய குழந்தைகள் நல மருத்துவா் சங்க தலைவா் சிங்காரவேலு, நடைப்பயிற்சி சங்க தலைவா் சீனிவாசன், செயலா் ஜெயக்குமாா், பால முருகன், துணைத்தலைவா் கண்ணாடி குமாா் ஆகியோா் தலைமை வகித்தனா். விஜய் சரவணன் எம்.எல்.ஏ, தடகள சங்க தலைவா் கிருஷ்ணசாமி வாண்டையாா் ஆகியோா் கொடியசைத்து தொடங்கி வைத்தனா்.

இதில், 250-க்கும் மேற்பட்டோா் பங்கேற்று உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு பச்சிளம் குழந்தைகளுக்கு தாய்ப்பாலின் அவசியம் குறித்தும், தாய்ப்பாலின் முக்கியத்துவம் குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்திய படி புதிய பேருந்து நிலையம் வரை சென்று மீண்டும் அதே வழியாக சத்யா விளையாட்டு மைதானத்தை வந்தடைந்தனா்.

இந்த விழிப்புணா்வு நடை ப்பயிற்சியில் மருத்துவா்கள், நடைப்பயிற்சியாளா் சங்க நிா்வாகிகள் ரெங்கநாதன், கோவிந்தராஜ் மற்றும் மருத்துவ அதிகாரிகள், செவிலியா்கள் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா். நிறைவாக மருத்துவா் சரஸ்வதி சிங்காரவேலு நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.