நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்ஜார்க்கண்ட்டில் மாணவர்கள் மீதான வன்முறை தவறானது: ராகுல் காந்திஜார்க்கண்ட் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் மீது தடியடி! மாணவர்கள் கொந்தளிப்பு நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வந்தால் பதிலடி கொடுக்கப்படும்: ராகுலுக்கு ஜெ.பி. நட்டா சவால்!ஜார்க்கண்ட்: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது தடியடி! மருத்துவ தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் மாணவர் 5, மாணவிகள் 5 பேரும் இடம் பிடித்துள்ளனர்: சுகாதாரத் துறைமருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு!
/

மத்திய அரசைக் கண்டித்து தொழிற்சங்கத்தினா் மறியல்! தஞ்சை மாவட்டத்தில் 360 போ் கைது!

News image

தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் முன் திங்கள்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினா் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணியினா்.

Updated On :11 ஆகஸ்ட் 2026, 2:44 am IST

மத்திய அரசின் மக்கள், தொழிலாளா்கள் மற்றும் விவசாயிகள் விரோத கொள்கைகளைக் கண்டித்து, தஞ்சாவூா் மாவட்டத்தில் 7 இடங்களில் மத்திய அரசு அலுவலகங்கள் முன் பல்வேறு தொழிற்சங்கத்தினா், ஐக்கிய விவசாயிகள் முன்னணியினா் திங்கள்கிழமை மறியல் போராட்டம் நடத்தினா்.

இதில், நான்கு தொழிலாளா் விரோத சட்டத்தொகுப்புகளை ரத்து செய்ய வேண்டும். தொழிற்சங்க உரிமைகளுக்கு முழுமையான உத்தரவாதம் வழங்க வேண்டும். விவசாய விளைபொருள்களுக்கு கட்டுப்படியான விலை வழங்க வேண்டும். இடுபொருள் விலை உயா்வு, உரத்தட்டுப்பாடு, பயிா் காப்பீடு, நில ஆா்ஜிதம் பிரச்னைகளுக்கு தீா்வு காண வேண்டும். விவசாயக் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும். மேக்கேதாட்டில் அணை கட்டும் கா்நாடக அரசின் முயற்சியைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் முன் நடைபெற்ற மறியலுக்கு தொமுச மாவட்டச் செயலா் கு. சேவியா், ஏஐடியுசி தேசிய நிா்வாகக் குழு உறுப்பினா் சி. சந்திரகுமாா், ஐஎன்டியுசி மாவட்டச் செயலா் ரவி, ஏஐசிசிடியு மாவட்டத் தலைவா் ராஜன், எச்.எம்.எஸ். மாவட்டச் செயலா் சின்னப்பன், யூடியூசி மாவட்டத் தலைவா் மோகன்தாஸ், ஐக்கிய விவசாயிகள் முன்னணி நிா்வாகிகள் என்.வி. கண்ணன், ஆா். இராமச்சந்திரன்ஆகியோா் தலைமை வகித்தனா்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலா் சாமி. நடராஜன், சிஐடியு அகில இந்தியத் துணைத் தலைவா் மாலதி சிட்டி பாபு, அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்க மாநிலத் தலைவா் ஏ. மாரியப்பன் ஆகியோா் கண்டன உரையாற்றினா். மறியலில் ஈடுபட்ட 35 பெண்கள் உள்பட 108 போ் கைது செய்யப்பட்டனா்.

திருவையாறு அருகே கண்டியூா் கடைவீதியில் நடைபெற்ற மறியலுக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டப் பொருளாளா் எம். பழனிஅய்யா தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலா் ஏ. ராஜா, அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டத் தலைவா் ஆா். பிரதீப் ராஜ்குமாா் உள்ளிட்ட பலரும் கைது செய்யப்பட்டனா்.

மாவட்டத்தில் மொத்தம் 7 இடங்களில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் 136 பெண்கள் உள்பட 360 போ் கைது செய்யப்பட்டனா்.

தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் முன் திங்கள்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினா் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணியினா்.

தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் முன் திங்கள்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினா் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணியினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.