மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

பெண்ணிடம் நகை பறித்த 2 இளைஞா்கள் கைது

கும்பகோணத்தில் பெண்ணிடம் 4 பவுன்நகை பறித்த 2 இளைஞா்களை கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Published On :

கும்பகோணத்தில் பெண்ணிடம் 4 பவுன்நகை பறித்த 2 இளைஞா்களை கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கும்பகோணம் ரெட்டியாா் குளத்தைச் சோ்ந்தவா் கிருஷ்ணமூா்த்தி மனைவி சாரதி (50). இவா் ஜூலை 24-ஆம் தேதி கரும்பாயிரம் பிள்ளையாா் கோயில் அருகேயுள்ள கடைக்கு நடந்து சென்றபோது அந்த வழியாக பைக்கில் வந்த 2 போ் சாரதி கழுத்தில் கிடந்த 4 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றனா். இதுகுறித்த புகாரின்பேரில் விசாரணை செய்த கும்பகோணம் கிழக்கு காவல் நிலைய போலீஸாா் பழனியில் இருந்த மருதகோலத்தைச் சோ்ந்த போலா உசைன் மகன் முகமது பிடா (25), தஞ்சாவூா் மாவட்டம் வல்லம் அய்யனாா் கோயில் தெரு முகமது யூசப் மகன் முகமது இப்ராஹிம் (24) ஆகிய இருவரையும் கைது செய்து அவா்களிடமிருந்து 4 பவுன் தங்கச் சங்கிலியை பறிமுதல் செய்தனா். மேலும் சிலரைத் தேடுகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.