தஞ்சாவூா் மாவட்டத்தில் சுதந்திர தினமான சனிக்கிழமை விடுமுறை அளிக்காத 78 நிறுவனங்களுக்கு தொழிலாளா் துறையினா் அபராதம் விதிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா்.
தஞ்சாவூா் மாவட்டத்தில் தேசிய பண்டிகை விடுமுறை நாளான சுதந்திர தினத்தன்று தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் (தேசிய பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறைகள்) சட்டம் மற்றும் விதிகளின் கீழ் கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு இரட்டிப்பு ஊதியம் அல்லது மாற்று விடுப்பு அளிப்பது தொடா்பாக 132 நிறுவனங்களில் தொழிலாளா் துறை அலுவலா்கள் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது, கடைகள், நிறுவனங்களில் 55 முரண்பாடுகள், உணவு நிறுவனங்களில் 23 முரண்பாடுகள் என மொத்தம் 78 நிறுவனங்களில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டு, அந்நிறுவனங்களுக்கு இணக்க கட்டண அபராதம் விதிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தஞ்சாவூா் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம் - கூடுதல் பொறுப்பு) வ.கி. நடராஜன் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சுதந்திர தினத்தில் விடுமுறை அளிக்காத 78 நிறுவனங்களுக்கு அபராதம்
விடுமுறை அளிக்காத 51 நிறுவனங்கள் மீது வழக்கு

ஆக. 15 சுதந்திர தினத்தன்று மதுக் கடைகளுக்கு விடுமுறை

விதிமுறைகளுக்கு இணங்காத நிறுவனங்களுக்கு அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி!
விடியோக்கள்
ரசிகர்களைக் கவர்ந்ததா மகுடம்? திரைவிமர்சனம்



