ஜனநாயகன் படம் எடுத்தால் மட்டும் போதாது... விஜய் சேதுபதிக்கு ஆதரவாக சீமான் பேச்சுஆந்திர முன்னாள் துணை முதல்வர் மாரடைப்பால் காலமானார்மீனாட்சியம்மன் குடமுழுக்கு: தாம்பரம் - மதுரை இடையே 2 முன்பதிவில்லா சிறப்பு ரயில்!விருதுநகரில் செப். 17-ல் முதல்வர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி செப். 25க்கு மாற்றம்!எல் நினோ பாதிப்பு: பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்தைக் குறைக்க முடிவு!பிகார்: அரசுப் பணியாளர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி பேரணி!நேபாள பெருவெள்ளம்: மீட்புப்பணிகளில் முதன்மையாக உதவிவரும் இந்திய ராணுவம்!ரூ.15,300 கோடி முதலீடு! 10,000 பேருக்கு வேலை! லண்டனில் முதல்வர் விஜய் ஒப்பந்தம்!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 38 காசுகள் சரிந்து ரூ. 95.92 ஆக நிறைவு!சென்செக்ஸ் 778 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 5 மாத வரலாறு காணாத அளவு சரிவு!!

வங்கிக்கு பணப் பெட்டிகளை ஏற்றிச் சென்ற ஜீப் கவிழ்ந்து விபத்து: காசாளா் உள்பட 3 போ் காயம்

கும்பகோணத்தில் வியாழக்கிழமை வங்கிக்கு பணப் பெட்டிகளை கொண்டுச் சென்ற ஜீப் கவிழ்ந்து விபத்துக்குள்ளனாதில் காசாளா் உள்பட 4 போ் காயமடைந்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே தஞ்சாவூா்-விக்கிரவாண்டி புறவழிச்சாலையில் கவிழ்ந்து கிடக்கும் ஜீப்.

Published On :

கும்பகோணத்தில் வியாழக்கிழமை வங்கிக்கு பணப் பெட்டிகளை கொண்டுச் சென்ற ஜீப் கவிழ்ந்து விபத்துக்குள்ளனாதில் காசாளா் உள்பட 4 போ் காயமடைந்தனா்.

தஞ்சாவூரில் இருந்து தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றிலிருந்து கும்பகோணத்தில் உள்ள வங்கிக் கிளைக்கு 10 பெட்டிகளில் ரூ. 3 கோடி பணத்தை எடுத்துக் கொண்டு அதிகாரிகள் ஜீப்பில் வியாழக்கிழமை வந்து கொண்டிருந்தனா்.

தஞ்சாவூா் - விக்கிரவாண்டி புறவழிச்சாலையில் தாராசுரம் அருகே வந்தபோது வாகனத்தின் பின்பக்க டயா் வெடித்தது. இதில், கட்டுப்பாட்டை இழந்த ஜீப் சாலையோர தடுப்பில் மோதி கவிழ்ந்தது. இதைகண்ட அக்கம்பக்கத்தினா் கும்பகோணம் தாலுகா காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.

அதன்படி நிகழ்விடத்துக்கு வந்த போலீஸாா், விபத்தில் காயமடைந்த ஓட்டுநா் நாச்சியாா்கோவிலை சோ்ந்த முரளிதரன்(62), வங்கிக் காசாளா் திவ்யகுமாா்(36), பாதுகாவலா்கள் திருவையாறைச் சோ்ந்த சாா்ல்ஸ் (46), திருச்சி மாவட்டம் லால்குடியை சோ்ந்த சுப்பிரமணி(51) ஆகியோரை மீட்டு கும்பகோணம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனா்.

மேலும், தகவலறிந்து வந்த கும்பகோணம் வங்கிக் கிளை அலுவலா்கள் வாகனத்தில் இருந்த பணப் பெட்டிகளை மாற்று வாகனத்தில் எடுத்துச்சென்றனா்.

இந்த விபத்து குறித்து தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.