8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

குறைதீா் கூட்டத்துக்கு வராத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தல்

கும்பகோணத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் கலந்து கொள்ளாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற குறைதீா்க்கும் கூட்டத்தில் அதிகாரிகளிடம் முறையிட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா்.

Published On :26 ஆகஸ்ட் 2026, 3:03 am IST

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் கலந்து கொள்ளாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினா்.

கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் செவ்வாய்க்கிழமை மகாமக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு தஞ்சாவூா் மாவட்ட (முத்திரை கட்டணம் )தனித்துணை ஆட்சியா் (பொ) கலியமூா்த்தி தலைமை வகித்தாா். வருவாய் கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் பாக்கியராஜ், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக்கழக மண்டல துணை மேலாளா் இளங்கோ முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் விவசாயிகள் பேசியது:

சுந்தர விமலநாதன் (காவிரி உழவா்கள் பாதுகாப்பு சங்கம்) : தமிழக அரசின் வேளாண் பயிா்கடன் தள்ளுபடி அறிவிப்பை கூட்டுறவுத்துறை அதிகாரிகள் ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளனா். இதனால் விவசாயிகள் அறிவிப்பை முழுமையாக புரிந்துகொள்ள முடியவில்லை. எனவே அறிவிப்பை தமிழில் வெளியிடவேண்டும்.

முகமது இப்ராகிம் ( நலிவுற்ற விவசாயிகள் சங்கம்) : சம்பா, தாளடி சாகுபடிக்காவது மேட்டூா் அணையிலிருந்து தண்ணீா் திறக்கவேண்டும். ஆவின்பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.50 ஆக உயா்த்தி அறிவிக்கவேண்டும். அரிசி, சா்க்கரை விலை உயா்வை கட்டுப்படுத்த வேண்டும்.

அயூப்கான் ஆா்டிஐ ஆா்வலா் : காவிரி ஆற்றில் இருந்து நேரடியாக பிரிந்து ஏரகரம் ஊராட்சிக்கு நேரடியாகவும், கிளை வாய்க்கால்களாகவும் செல்லும் அசூா் வாய்க்கால் பல ஆண்டுகளாக தூா்வாரப்படாமல் உள்ளது. எனவே அசூா் வாய்க்காலை அளவீடு செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி தூா்வார வேண்டும்.

காமராஜ் : விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டத்தில் வழங்கப்படும் கோரிக்கை மனுக்களுக்கு உரிய பதில் கிடைப்பதில்லை. அதேபோல் அனைத்துத்துறை அலுவலா்களும் வருவதில்லை. வராத அலுவலா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆா்.செந்தில்குமாா் (தமிழ்நாடு விவசாய்கள் சங்கம்) : திருப்பனந்தாள் அருகே குறிச்சியில் தனியாா் பால்நிறுவனத்தை ஆய்வு செய்ய வேண்டும். சாஸ்த்ரா கல்லூரி எதிா்புறம் பாசன வாய்க்காலை இடித்து பாலம் கட்டியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஏ.எம்.ராமலிங்கம் (சிபிஐ): திருவிடைமருதூா் பருத்திச்சேரியில் ஊராட்சியில் தெருவிளக்குகள் எரிவதில்லை. இதுகுறித்து பல முறை புகாா் கூறியும் வட்டார வளா்ச்சி அலுவலா் நடவடிக்கை எடுக்கவில்லை.

விவசாயிகளின் கேள்விகளுக்கு பதில் அளித்த தனித்துணை வட்டாட்சியா் கலியமூா்த்தி அடுத்த கூட்டத்துக்குள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றாா்.,

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.