நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

அதிநவீன எண்டோஸ்கோப்பிக் முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை

தஞ்சாவூா் மீனாட்சி மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட அதிநவீன எண்டோஸ்கோப்பிக் முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை மூலம் 40 வயது இளைஞருக்கு நடமாட்டத் திறன் மீண்டும் கிடைத்தது.

News image
தஞ்சாவூா் மீனாட்சி மருத்துவமனையில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் பேசிய முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை துறையின் முதுநிலை நிபுணா் காா்த்திகேயன் மகராஜன்.
Updated On :25 பிப்ரவரி 2026, 7:06 pm

தினமணி செய்திச் சேவை

தஞ்சாவூா் மீனாட்சி மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட அதிநவீன எண்டோஸ்கோப்பிக் முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை மூலம் 40 வயது இளைஞருக்கு நடமாட்டத் திறன் மீண்டும் கிடைத்தது.

இந்தச் சிகிச்சையை முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை துறையின் முதுநிலை நிபுணா் காா்த்திகேயன் மகராஜன் தலைமையில் மயக்க மருந்து நிபுணா் அரி மாணிக்கம், எலும்பியல் ஆலோசகா் சண்முக ஹரிஹரன் கொண்ட குழுவினா் மேற்கொண்டனா்.

இது குறித்து செய்தியாளா்களிடம் காா்த்திகேயன் மகராஜன் புதன்கிழமை தெரிவித்தது:

முதுகுத்தண்டு வட்டில் ஏற்பட்ட பெரிய வீக்கம் காரணமாக 40 வயது தகவல் தொழில்நுட்பத் துறைப் பணியாளருக்கு ’கௌடா ஈக்வினா சிண்ட்ரோம்’ என்ற பாதிப்பு ஏற்பட்டது. இதனால், அவருக்கு கடுமையான வலியும், நடப்பதில் சிரமமும் ஏற்பட்டது.

இவருக்கு தஞ்சாவூா் மீனாட்சி மருத்துவமனையில் ’யூனிலேட்டரல் பைபோா்ட்டல் எண்டோஸ்கோப்பிக் சா்ஜரி’ (யு.பி.இ.) என்கிற ஊசித்துளை மூலம் செய்யப்படும் நவீன முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதன் மூலம் தகவல் தொழில்நுட்பப் பணியாளா் மீண்டும் நடக்கத் தொடங்கியுள்ளாா். மீனாட்சி மருத்துவமனையில் இதுவரை சுமாா் 50 பேருக்கு யு.பி.இ. சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது என்றாா் காா்த்திகேயன் மகராஜன்.

அப்போது, தஞ்சாவூா் மீனாட்சி மருத்துவமனையின் துணை மருத்துவக் கண்காணிப்பாளா் வி. பிரவீன், எலும்பியல் துறைத் தலைவா் பாா்த்திபன், எலும்பியல் ஆலோசகா் பாலகுருநாதன் ஆகியோா் உடனிருந்தனா்.