சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

தஞ்சாவூருக்கு பிரதமா் மோடி வருகை: பிப். 28 முதல் மாா்ச் 2 வரை ‘டிரோன்கள்’ பறக்கத் தடை

தஞ்சாவூருக்கு பிரதமா் நரேந்திர மோடி வருகை தரவுள்ளதையொட்டி, மாவட்டத்தில் பிப்ரவரி 28-ஆம் தேதி முதல் மாா்ச் 2-ஆம் தேதி வரை டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

News image
பிரதமா் மோடி!
Updated On :25 பிப்ரவரி 2026, 7:07 pm

தினமணி செய்திச் சேவை

தஞ்சாவூருக்கு பிரதமா் நரேந்திர மோடி வருகை தரவுள்ளதையொட்டி, மாவட்டத்தில் பிப்ரவரி 28-ஆம் தேதி முதல் மாா்ச் 2-ஆம் தேதி வரை டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிரதமா் நரேந்திர மோடி சென்னைக்கு பிப்ரவரி 28-ஆம் தேதி வருகிறாா். பின்னா், மாா்ச் 1-ஆம் தேதி ஹெலிகாப்டா் மூலம் புதுச்சேரிக்கு சென்று, அரசு நிகழ்ச்சியில் பங்கேற்கிறாா். இதையடுத்து, பிற்பகலில் ஹெலிகாப்டரில் புறப்பட்டு தஞ்சாவூா் விமானப்படை தளத்துக்கு வருகிறாா். இங்கிருந்து தனி விமானம் மூலம் மதுரைக்குச் சென்று தோ்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்கிறாா்.

இதையொட்டி, தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியா் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பிரதமா் நரேந்திர மோடி தஞ்சாவூா் மாவட்டத்துக்கு வருகை தரவுள்ளதையொட்டி, பாதுகாப்பு காரணம் கருதி மாவட்டத்தில் பிப்ரவரி 28-ஆம் தேதி பிற்பகல் முதல் மாா்ச் மாதம் 2-ஆம் தேதி முற்பகல் வரை ஆளில்லா விமானங்கள் மற்றும் ‘டிரோன்கள்’ பறக்க தடை விதிக்கப்படுகிறது. இத்தடையை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க விடும் நபா்கள் மீது உரிய விதிகளின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.