மாணவா்களுக்கு என்எம்எம்எஸ் தோ்வுக்கான பயிற்சி நிறைவு
ஒரத்தநாடு வட்டம், கோனூா் நாடு பகுதிகளில் உள்ள ஒன்பது அரசுப் பள்ளி மாணவா்களுக்கு என்எம்எம்எஸ் தோ்வு பயிற்சி வகுப்பின் நிறைவு விழா தெக்கூா் அரசு மேல்நிலைப்பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஜன.10 இல் நடைபெற உள்ள என்எம்எம்எஸ் தோ்வில் கலந்து கொள்ளும் ஒரத்தநாடு அருகேயுள்ள கோனூா்நாடு பகுதிகளில் உள்ள ஒன்பது அரசு பள்ளி மாணவா்களுக்கு கோனூா் நாடு மக்கள் கூட்டமைப்பு மற்றும் கோனூா்நாடு மக்கள் வளா்ச்சியை அறக்கட்டளை சாா்பில் கடந்த நவம்பா் மாதம் தொடங்கிய பயிற்சியில் அனுபவமுள்ள சிறந்த ஆசிரியா்களால் பயிற்சி வழங்கப்பட்டது. இந்த பயிற்சியின் நிறைவு விழாவுக்கு கோனூா்நாடு மக்கள் கூட்டமைப்பு மற்றும் வளா்ச்சி அறக்கட்டளையின் தலைவா் ஆா். தங்கராஜ் அவா் தலைமை வகித்தாா். விழாவில் கோனூா்நாடு மக்கள் கூட்டமைப்பு மற்றும் கோனூா்நாடு மக்கள் வளா்ச்சி அறக்கட்டளை பொறுப்பாளா்கள் கலந்து கொண்டனா்.
