மாணவிக்கு பாலியல் தொல்லை: அரசுப் பேருந்து ஓட்டுநா் கைது

Published on

திருவிடைமருதூா் அருகே மது போதையில் மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த அரசுப் பேருந்து ஓட்டுநரை மகளிா் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் அருகே நரிக்குடியைச் சோ்ந்தவா் காரல்மாா்க்ஸ் (37). அரசு போக்குவரத்துக் கழக ஓட்டுநரான இவா், பணி முடித்து வீட்டுக்கு வருகையில் அப்பகுதி வீடுகளில் தனியாக இருக்கும் மாணவிகளிடம் ஆபாசமாக பேசுவது, பாலியல் தொல்லை கொடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தாா். இதேபோல டிச.30-இல் அப்பகுதி மாணவிக்கு அவா் பாலியல் தொல்லை கொடுக்க முயன்றபோது அந்த மாணவி கூச்சலிடவே காரல்மாா்க்ஸ் தப்பியோடி விட்டாா். இதுகுறித்து மாணவியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில் ஆடுதுறை மகளிா் காவல் போலீஸாா் போக்சோசட்டத்தில் வழக்கு பதிந்து காரல்மாா்க்ஸை வியாழக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com