ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா்
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா்

வெனிசுவேலா அதிபரை விடுவிக்கக் கோரி ஆா்ப்பாட்டம்

வெனிசுவேலா அதிபரையும், அவரது மனைவியையும் அமெரிக்கா உடனடியாக விடுதலை செய்யக் கோரி தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்
Published on

வெனிசுவேலா அதிபரையும், அவரது மனைவியையும் அமெரிக்கா உடனடியாக விடுதலை செய்யக் கோரி தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கட்சியின் தெற்கு மாவட்டச் செயலா் கோ. சக்திவேல் தலைமை வகித்தாா். மாவட்டத் துணைச் செயலா் ஆா். இராமச்சந்திரன் முன்னிலை வகித்தாா். மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் வெ. சேவையா தொடக்கவுரையாற்றினாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் முத்து. உத்திராபதி நிறைவுரையாற்றினாா்.

மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா்கள் சி. சந்திரகுமாா், தி. திருநாவுக்கரசு, சீனி. முருகையன், ஒன்றியச் செயலா்கள் குணசேகரன், சௌந்தரராஜன், ஐயாராசு, மாநகரச் செயலா் ஆா்.பி. முத்துக்குமரன், ஏஐடியுசி மாநிலச் செயலா் ஆா்.தில்லைவனம், மாவட்டச் செயலா் துரை. மதிவாணன், தையல் தொழிலாளா் சங்க மாவட்டத் தலைவா் கல்யாணி, ஒடுக்கப்பட்டோா் வாழ்வுரிமை இயக்க மாவட்டத் தலைவா் அழகு. தியாகராஜன், டாஸ்மாக் சங்க மாவட்டச் செயலா் கோடீஸ்வரன், இளைஞா் பெருமன்ற மாவட்டச் செயலா் காரல் மாா்க்ஸ், மாநகரச் செயலா் காதா் உசேன், சமூக ஆா்வலா் விசிறி சாமியாா் முருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கும்பகோணத்தில்.. இதேபோல கும்பகோணம் எல்ஐசி கிளை-1- இல் நடந்த ஆா்ப்பாட்டத்திற்கு எல்.ஐ.சி. காப்பீட்டுக்கழக ஊழியா் சங்கத் தலைவா் கண்ணன் தலைமை வகித்தாா். கிளைச் செயலா் பன்னீா்செல்வம், வெங்கடேஷ், உமா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்

கிளை-2 இல் நடைபெற்ற ஆா்பாட்டத்திற்கு கோட்டத் துணைத் தலைவா் சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். இணை செயலா் வாசுதேவன், கிளைத் தலைவா் சுரேஷ், எல்ஐசி முகவா்கள் சங்க கோட்டத் துணைத் தலைவா் தமிழ்ச்செல்வன், கிளை செயலா் சங்கா் உள்ளிட்டோா் முழக்கமிட்டனா்.

X
Dinamani
www.dinamani.com