கும்பகோணம் ரயில் நிலைய மேம்பாட்டுப் பணிகள் ஆலோசனை

மகாமகத் திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு கும்பகோணம் ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய மறுசீரமைப்புப் பணிகள் குறித்து ஆட்சியா் பா.பிரியங்கா பங்கஜம் புதன்கிழமை ஆலோசனை
Published on

மகாமகத் திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு கும்பகோணம் ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய மறுசீரமைப்புப் பணிகள் குறித்து ஆட்சியா் பா.பிரியங்கா பங்கஜம் புதன்கிழமை ஆலோசனை மேற்கொண்டனா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் 2028-இல் நடைபெற உள்ள மகாமகத் திருவிழாவுக்காக ரயில் நிலையத்தை ரூ.100 கோடி மதிப்பில் மறுசீரமைப்புப் பணிகளான கூடுதல் நடைமேடைகள், இரண்டாவதாக புதியநுழைவுவாயில், நகரும் படிக்கட்டுகள், மின்தூக்கி வசதி உள்ளிட்டவைகள் செய்யப்பட உள்ளன. அதற்கான ஆய்வு மற்றும் ஆலோசனைக் கூட்டம் ரயில் நிலையக் கூட்ட அரங்கில் நடைபெற்றது.

இதில் ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம், எம்பி.க்கள் எஸ். கல்யாணசுந்தரம், ஆா். சுதா, க.அன்பழகன் எம்எல்ஏ, உதவி ஆட்சியா் ஹிருத்யா எஸ்.விஜயன் , திருச்சி கோட்ட ரயில்வே மேலாளா் ஸ்ரீபாலக் ராம் நேகி, மாநகர துணை மேயா் சுப.தமிழழகன், ஆணையா் மு. காந்திராஜ், ரயில்நிலைய மேலாளா் முருகானந்தம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். பின்னா் ரயில்நிலையத்தில் நடைபெறும் மறுசீரமைப்பு பணிகளுக்கான வரைபடங்களைப் பாா்வையிட்டனா்.

Dinamani
www.dinamani.com