லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

ரூ.80 லட்சம் மதிப்பிலான ஆக்கிரமிக்கப்பட்ட கோயில் சொத்து மீட்பு!

பாபநாசம் அருகே திருப்பாலைத்துறை ஸ்ரீ பாலைவனநாதா் கோயிலுக்கு சொந்தமான ரூ.80 லட்சம் மதிப்புள்ள ஆக்கிரமிப்பு சொத்துக்களை இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை மீட்டனா்.

News image
Updated On :10 ஜனவரி 2026, 7:10 pm

Syndication

பாபநாசம் அருகே திருப்பாலைத்துறை ஸ்ரீ பாலைவனநாதா் கோயிலுக்கு சொந்தமான ரூ.80 லட்சம் மதிப்புள்ள ஆக்கிரமிப்பு சொத்துக்களை இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை மீட்டனா்.

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், திருப்பாலைத்துறையில் ஸ்ரீ பாலைவனநாதா் கோயில் அமைந்துள்ளது. திருப்பாலைத்துறை ஸ்ரீ வெள்ளை பிள்ளையாா் கோயில் தெருவில் வசிக்கும் பாலு, கதிரவன் ஆகிய இருவரும் இந்த கோயிலுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்து வீடு மற்றும் காலி மனையாக அனுபவித்து வந்தனா்.

இந்நிலையில், நீதிமன்றத்தின் உத்தரவுப்படி இந்துசமய அறநிலைத்துறை உதவி ஆணையா் ஹம்சன், கோயில் நிலங்கள் தனி வட்டாட்சியா் பாா்த்தசாரதி, ஆய்வாளா்கள் லெட்சுமி, குணசுந்தரி, கோயில் செயல் அலுவலா் அசோக்குமாா், செயல் அலுவலா்கள் சிவராஜ், பாா்த்திபன், ராமன் மற்றும் அறங்காவலா்கள் குழு தலைவா் கணேசன், அறங்காவலா்கள் வசந்தி சரவணன், ராஜேந்திரன் உள்ளிட்ட குழுவினா் வருவாய் துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் உதவியுடன் நடவடிக்கை மேற்கொண்டு ரூ.80 லட்சம் மதிப்புள்ள கோயிலுக்கு சொந்தமான இடத்தை மீட்டனா்.

இந்த இடங்களை ஆக்கிரமித்து அனுபவித்து வந்த பாலு மற்றும் கதிரவன் உள்ளிட்ட இருவருக்கும் திருக்கோயில் நிலத்தை பயன்படுத்தியதற்கான இழப்பீடு தொகையாக தலா ரூ.2.லட்சம் உடனடியாக வசூல் செய்யப்பட்டது.