ஆற்றங்கரையில் சிதறிக் கிடந்த ரத்தம்: போலீஸாா் விசாரணை

தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் வீரசோழன் ஆற்றங்கரையில் சிதறிக் கிடந்த ரத்தம் குறித்து போலீஸாா் விசாரணை
Published on

தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் வீரசோழன் ஆற்றங்கரையில் செவ்வாய்க்கிழமை காலை சிதறிக் கிடந்த ரத்தம் குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

வீரசோழன் ஆற்றின் ஆற்றங்கரை அருகே தரையில் அதிகளவு ரத்தம் சிதறி கிடந்தது, மேலும் ஆற்றின் கரை வரை உடலை இழுத்துச் சென்றதுபோல ரத்தம் படிந்து கிடந்தது.

இதைப்பாா்த்த அப்பகுதி பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில் வந்த திருவிடைமருதூா் தடயங்களை சேகரித்து, தீயணைப்பு துறையினரையும் வரவழைத்து ஆற்றில் சடலம் ஏதும் உள்ளதா எனத் தேடுகின்றனா்.

Dinamani
www.dinamani.com